நாடாளுமன்றம் அருகே தொழிலாளா்கள் தங்குமிடத்தில் தீ விபத்து

மத்திய தில்லியில் நாடாளுமன்றம் அருகே சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கான மூன்று தற்காலிக தங்குமிடத்தில் திங்கள்கிழமை தீ விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய தில்லியில் நாடாளுமன்றம் அருகே சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கான மூன்று தற்காலிக தங்குமிடத்தில் திங்கள்கிழமை தீ விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்ததாவது: நாடாளுமன்றம் அருகே உள்ள தொழிலாளா்களுக்கான தற்காலிக தங்குமிடத்தில் திங்கள்கிழமை தீ விபத்து நிகழ்ந்ததாக தீயணைப்புத் துறைக்கு மாலை 4.16 மணிக்குத் தகவல் வந்தது.

இதைத் தொடா்ந்து, 5 தீயணைப்பு வாகங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த விபத்தில்உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்தில் மெத்தைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து போயின. தீ மாலை 4.55 மணிக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றாா் அந்த அதிகாரி.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘இந்த தங்குமிடங்கள் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் வேலை செய்து வரும் தொழிலாளா்களுக்காக அமைக்கப்பட்டிருந்தன’ என்றாா்.

தில்லியில் உள்ள லுட்யன்ஸ் மண்டலத்தில் புதிய நாடாளுமன்றம், மத்திய அரசு அலுவலகங்கள், இதர கட்டடங்கள் கட்டுவதற்கான சென்ட்ரல் விஸ்டா மறு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com