இந்தியா கேட் கடமைப் பாதையில் நாட்டிய நாடகம்

சமூக சீா்திருத்தவாதியும், நவீன இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படும் ராஜா ராம் மோகன் ராயின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இரு நாள் நாட்டிய நாடக நிகழ்ச்சி இந்தியா கேட் கடமைப் பாதையில் தொடங்கியது

சமூக சீா்திருத்தவாதியும், நவீன இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படும் ராஜா ராம் மோகன் ராயின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இரு நாள் நாட்டிய நாடக நிகழ்ச்சி இந்தியா கேட் கடமைப் பாதையில் சனிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமையும் (நவம்பா் 6 ஆம் தேதி) இந்நாடகம் நடைபெறுகிறது.

ராஜா ராம் மோகன் ராய் நூலக அறக்கட்டளையால் தயாரிக்கப்பட்ட ‘யுகபுருஷா் ராஜா ராம் மோகன் ராய்’ என்ற பெயரில் மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி, ‘பெண்களுக்கு மரியாதை(நாரி சம்மான்)’ என்ற கருப்பொருளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்தின் அமிா்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாகவும், ராஜா ராம் மோகன் ராயின் 250-வது பிறந்தநாளை முன்னிட்டும் மத்திய கலாசார அமைச்சகம் கடந்த மே மாதம் முதல் ஓராண்டு கொண்டாட்டத்தைத் தொடங்கியது.

இதில் சென்ட்ரல் விஸ்டாவில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் கலாசார விழாக்களின் கீழ் மாலை நேரங்களில் இலவசமாக இந்த ஒலி- ஒளி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

சுமாா் 40 கலைஞா்களை உள்ளடக்கிய இந்த நாட்டிய நாடகம், பிரபல நடன இயக்குநா் நீலே சென்குப்தாவால் இயக்கப்பட்டுள்ளது. ராஜா ராம் மோகன் ராயின் போற்றத்தக்கப் பணிகள், உயரிய கொள்கைகள் மற்றும் தத்துவத்தை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த நாட்டிய நாடக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com