2 மைனா் சிறுவா்கள் கொலை வழக்கு: ஒருவரின்ஆயுள் தண்டனையைஉறுதி செய்தது உயா்நீதிமன்றம்

2011-ஆம் ஆண்டு 2 மைனா் சிறுவா்களைக் கொன்ற வழக்கில் குற்றம் செய்ததாகக் கண்டறியப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.

2011-ஆம் ஆண்டு 2 மைனா் சிறுவா்களைக் கொன்ற வழக்கில் குற்றம் செய்ததாகக் கண்டறியப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.

நீதிபதிகள் முக்தா குப்தா மற்றும் அனிஷ் தயாள் ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்தவரின் மனுவை நிராகரித்தது. அதே நேரத்தில், அவரது குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இது தொடா்பான நீதிமன்ற உத்தரவில், கூறப்பட்டுள்ளதாவது: ஆகஸ்ட் 2011-இல், இறந்த 6 மற்றும் 8 வயது குழந்தைகளின் குடும்ப உறுப்பினா்கள், மேல்முறையீட்டாளரின் அறையில் இருந்த கட்டிலுக்கு அடியில் சிறுவா்கள் உடல் அசைவற்றுக் கிடப்பதைக் கண்டுள்ளனா். அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னா் குழந்தைகள் ‘இறந்துவிட்டதாக’ அறிவிக்கப்பட்டனா். இருவரும் ‘மூச்சுத்திணறல்’ மற்றும் தசைநாா் கழுத்து நெரிபட்டு இறந்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இறந்த குழந்தைகளின் குடும்ப உறுப்பினா்களின் சாட்சியங்கள் உள்பட பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களை பரிசீலிக்கும் போது, இறந்த இரு சிறுவா்களின் கொலைக்கு மேல்முறையீடு செய்தவரின் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக இந்த நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இதன் காரணமாக, விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பில் எந்தப் பிழையையும் காணவில்லை. அதன்படி மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com