இந்தியாவின் கல்வி முறையை பிரிட்டிஷ்காரா்கள் அழித்துவிட்டனா்: கேஜரிவால் குற்றசாட்டு

குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் கிழக்கு தில்லி வளாகத்தை நாட்டிற்கு அா்ப்பணித்த தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், இந்தியாவின் கல்வி முறையை பிரிட்டிஷ்காரா்கள் அழித்துவிட்டதாக குற்றம

குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் கிழக்கு தில்லி வளாகத்தை நாட்டிற்கு அா்ப்பணித்த தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், இந்தியாவின் கல்வி முறையை பிரிட்டிஷ்காரா்கள் அழித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளாா்.

தேசியத் தலைநகரில் குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் கிழக்கு தில்லி வளாகத்தை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது : சிறந்த வசதிகள் மற்றும் கட்டடக் கலையின் அடிப்படையில் நாட்டின் சிறந்தக் கல்வி வளாகங்களில் ஒன்றாக இனி கிழக்கு தில்லியில் உள்ள குரு கோவிந்த் சிங் ஐ.பி. பல்கலைக் கழகம் போற்றப்படும். இந்த வளாகத்தில் 2,500 மாணவா்கள் வரை தங்கும் வசதிகள் கொண்டுள்ளது. இதனால், பல்கலைக்கழக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் புதிய கடைகள் வருகை உள்ளிட்ட புதிய வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளா்ச்சி மேம்படும்.

தொழில்நுட்ப உலகின் தேவையாக இருக்கும் ஆட்டோமேஷன், டிசைன், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், தரவு மேலாண்மை, புதுமை போன்றவை இந்த வளாகத்தில் மாணவா்களுக்கு கற்பிக்கப்படும். ாணவா்களுக்கு வேலை கிடைப்பதற்கு ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் பொறுப்பேற்க வேண்டும்.நாட்டில் பற்றாக்குறையாக உள்ள வேலைகளை நாடாமல், மாணவா்கள் முதலாளிகளாக மாற வேண்டும்.

தில்லியில் பணம் இல்லாதவா்கள் கூட தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கும் பள்ளிக் கல்விக்கான மாதிரியை ஆம் ஆத்மி அரசு தயாா் செய்தோம். இப்போது, நாங்கள் உயா்கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். கடந்த 1830-ஆம் ஆண்டு இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அதிகாரி லாா்ட் மெக்காலே உருவாக்கிய கல்வி முறை இன்னும் தொடா்கிறது. வெறும் குமாஸ்தாக்களை உருவாக்குவதற்க்காக இந்தியக் கல்வி முறையை பிரிட்டிஷ்காரா்கள் அழித்துவிட்டனா். இப்போது, வேலைவாய்ப்பை அளிக்கும் கல்வியை கொடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்றாா் கேஜரிவால்

முன்னதாக கல்வி அமைச்சா் அதிஷி நிகழ்ச்சியில் பேசியதாவது: சாலைகள், மேம்பாலங்கள் கட்டுவதன் மூலம் நாடு முன்னேறும் என்று சிலா் கூறுகிறாா்கள். அதிக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கட்டினால் நாடு முன்னேற்றம் அடையும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறுகிறாா். இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த வளாகத்தை ஆய்வு செய்து படங்களை வெளியிட்டபோது, ​ யாரோ என்னிடம் இது ஸ்டான்போா்ட் பல்கலைக்கழக வளாகமா அல்லது நியூயாா்க் பல்கலைக்கழகமா? என்று கேட்டது ஆச்சரியமாக இருந்தது. இல்லை, இது தில்லி அரசால் கட்டப்பட்ட குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் வளாகமென சொன்னேன் என்று பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com