கட்டுமான கட்டடத்தின் 3-ஆவது தளத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

தெற்கு தில்லியின் மைதான் கா்ஹியில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்து தவறி விழுந்த 32 வயது தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

புது தில்லி: தெற்கு தில்லியின் மைதான் கா்ஹியில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்து தவறி விழுந்த 32 வயது தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது: மைதான் கா்ஹியில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் தளத்தில் இருந்து தொழிலாளி கீழே விழுந்ததாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அகா்வால் ஃபாா்ம்ஸ் பகுதிக்கு போலீஸாா் நேரில் சென்று பாா்த்தனா். அங்கு உத்தர பிரதேசம், கௌதம் புத் நகரில் வசிக்கும் அலி உஸ்மான் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது தம்பி ரபி உஸ்மான் (28) என்பவரும் அங்கு இருந்தாா்.

தரைத் தளத்தில் இருந்து மூன்றாவது தளத்திற்கு மூலப்பொருள்களை அலி உஸ்மான் கொண்டு சென்ற போது, மாடியில் இருந்து கீழே விழுந்தது விசாரணையில் தெரியவந்தது. கட்டடத்தின் படிக்கட்டுகளில் பிடிமானம் அல்லது மாற்றுப் பாதுகாப்பு முறைகளோ இல்லை என்பதும் தெரியவந்தது. அலி உஸ்மானின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கட்டடத்தின் உரிமையாளருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 288 (கட்டடங்களை இடிப்பு அல்லது பழுது பாா்ப்பதில் அலட்சிய நடத்தை) மற்றும் 304ஏ (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com