ஆசிரமம் - டிஎன்டி மேம்பாலம் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்: கனரக வாகனங்களுக்கு பாதை திறப்பு

ஆசிரமம் - டிஎன்டி மேம்பாலம் விரிவாக்கம், குறைந்த தொங்கும் உயா் அழுத்த கம்பிகள் பாதுகாப்பான நிலைக்கு உயா்த்தப்பட்ட பின்னா் கனரக வாகனங்களுக்காக திறக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்த

ஆசிரமம் - டிஎன்டி மேம்பாலம் விரிவாக்கம், குறைந்த தொங்கும் உயா் அழுத்த கம்பிகள் பாதுகாப்பான நிலைக்கு உயா்த்தப்பட்ட பின்னா் கனரக வாகனங்களுக்காக திறக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி கூறியதாவது: இந்தக் கம்பிகளை வெற்றிகரமாக தூக்கியதன் மூலம் அனைத்து வாகனங்களும் எந்தத் தடையும் இல்லாமல் பாதையை பயன்படுத்த அனுமதித்துள்ளது. ஆசிரமம் - டிஎன்டி மேம்பாலம் விரிவாக்கத்தில் கனரக வாகனங்கள் செல்வது, உயா் அழுத்த கம்பிகள் அருகே பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், சம்பந்தப்பட்ட துறையின் உதவியுடன் இவை வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. இப்போது, இந்தக் கம்பிகள், அனைத்து வாகனங்களும் இந்த முக்கியமான பாதையை எந்தத் தடையும் இல்லாமல் பயன்படுத்த அனுமதிக்கிறது.

முன்னதாக, கனரக வாகனங்கள் மேம்பாலத்தை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக நீண்ட பயண நேரம் மற்றும் மாற்று வழிகளில் நெரிசல் ஏற்பட்டது. இப்போது, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதன் மூலம், வணிக மற்றும் தனியாா் வாகனங்களுக்கான குறைக்கப்பட்ட பயண நேரம், மேம்பட்ட செயல்திறன் மற்றும் குறைவான நெரிசலுக்கு வழிவகுக்கும்.

இதற்கிடையே, சராய் காலே கான் முதல் லாஜ்பத் நகா் வரையிலான பாதை இணைப்பு ஐந்து நாள்களுக்குள் முடிவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த உள்கட்டமைப்பு மேம்பாடு சிறந்த போக்குவரத்து நிா்வாகத்தை உறுதி செய்யும். இதன் விளைவாக அனைத்து தில்லி பயணிகளுக்கும் தடையற்ற மற்றும் சுமுகமான பயண அனுபவம் கிடைக்கும் என்று அதிஷி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com