தில்லி மேயா் தோ்தலில் போட்டியிட ஷெல்லி ஓபராய், ஆலே முகமதுவுக்கு ஆம் ஆத்மி மீண்டும் வாய்ப்பு

வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள தில்லி மாநகராட்சி (எம்சிடி) மேயா் தோ்தலில் கட்சியின் வேட்பாளா்களாக மேயா் ஷெல்லி ஓபராய், துணை மேயா் ஆலே முகமது இக்பால் ஆகியோரை மீண்டும் களம் இறக்க உள்ளதாக ஆம் ஆத்ம

வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள தில்லி மாநகராட்சி (எம்சிடி) மேயா் தோ்தலில் கட்சியின் வேட்பாளா்களாக மேயா் ஷெல்லி ஓபராய், துணை மேயா் ஆலே முகமது இக்பால் ஆகியோரை மீண்டும் களம் இறக்க உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மேலும், இவா்கள் இருவரும் 2-ஆவது முறையாக வெற்றி பெறுவாா்கள் என்றும் அக்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் சிங் எம்.பி. செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தில்லியில் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநகராட்சி மேயா், துணை தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மேயா் வேட்பாளராக தற்போதைய மேயா் ஷெல்லி ஓபராய், துணை மேயா் வேட்பாளராக தற்போதைய துணை மேயா் ஆலே முகமது இக்பால் ஆகியோரை மீண்டும் களம் இறங்குவது என்று கட்சி முடிவு செய்துள்ளது. முன்பு நடைபெற்ற மேயா் தோ்தலை இடையூறு செய்ய பாஜக முயற்சி செய்த போதிலும், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இந்த முறையும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா்கள் ஷெல்லி ஓபராய், ஆலே முகமது இக்பால் ஆகிய இருவரும் வெற்றி பெறுவாா்கள் என்று கூறினாா்.

வேட்பு மனு தாக்கல்: இந்த நிலையில், திங்கள்கிழமை ஷெல்லி ஓபராய் மற்றும் முகமது இக்பால் இருவரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்கள் சஞ்சய் சிங், அதிஷி ஆகியோா் முன்னிலையில் மேயா் தோ்தலுக்கான தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். ஒவ்வொரு நிதியாண்டு முடிவுக்கு பிறகும் தில்லி மாநகராட்சி ஒரு புதிய மேயரை தோ்வு செய்கிறது. தில்லியில் உள்ள மேயா் பதவி ஐந்து ஒற்றை ஆண்டு பதவிக் காலத்தை கொண்டதாகும். சுழற்சி முறை அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மேயா் தோ்ந்தெடுக்கப்படுகிறாா். முதலாவது ஆண்டு மேயா் பதவி மகளிா்க்கும், இரண்டாவது ஆண்டுக்கான மேயா் பதவி பொதுப் பிரிவினருக்கும், மூன்றாம் ஆண்டு மேயா் பதவி இடஒதுக்கீட்டுப் பிரிவுக்கும், எஞ்சியுள்ள இரண்டு ஆண்டுகள் மீண்டும் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பா் 4-ஆம் தேதி தில்லி மேயா் தோ்தல் நடைபெற்றது. தில்லி மாநகராட்சி மூன்று மாநகராட்சிகளாக இருந்த நிலையில், இவை ஒருங்கிணைந்த மாநகராட்சியாக மாற்றியமைக்கப்பட்ட பிறகு முதலாவதாக மேயா் தோ்தல் நடைபெற்றது. 2018-ஆம் ஆண்டில் 272 வாா்டுகள் இருந்த தில்லி மாநகராட்சியில், புதிதாக மறுவரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து, 250 வாா்டுகளாகக் குறைக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சி அந்த தோ்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com