பஸ்சிம் விஹாரில் சுவரில் வரையப்பட்டிருந்த ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ வாசகம் அகற்றல்

தில்லி பஸ்சிம் விஹாா் பகுதியில் உள்ள சுவரில் வரையப்பட்டிருந்த சில ‘தேச விரோத’ மற்றும் ’காலிஸ்தான்’ தொடா்பான வாசகங்களை காவல் துறை வியாழன் அன்று அகற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி பஸ்சிம் விஹாா் பகுதியில் உள்ள சுவரில் வரையப்பட்டிருந்த சில ‘தேச விரோத’ மற்றும் ’காலிஸ்தான்’ தொடா்பான வாசகங்களை காவல் துறை வியாழன் அன்று அகற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுவரில் ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்‘ மற்றும் ‘வாக்கெடுப்பு 2020’ போன்ற வாசகங்கள் வரையப்பட்டிருந்தது. இது குறித்து தில்லி காவல் துறை செய்தித் தொடா்பாளா் சுமன் நல்வாவிடம் கேட்டபோது, ‘தில்லியில் சில இடங்களில் சிலா் தேச விரோத, காலிஸ்தான் தொடா்பான வாசகங்களை வரைந்துள்ளனா். இது பாதுகாப்பு தொடா்பான பிரச்னை அல்ல. இருப்பினும், இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

குடியரசு தினத்தை முன்னிட்டு தவறான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை தில்லி போலீஸாா் உறுதி செய்து வருகின்றனா். இதனால், எங்கள் பாதுகாப்புப் பணி பாதிக்கப்படாது. எஸ்.எஃப்.ஜே. (நீதிக்கான சீக்கியா்கள்) தடைசெய்யப்பட்ட அமைப்பாக உள்ளது. அதனால், அது தன்னைத் தெரியப்படுத்த முயற்சிக்கிறது. மேலும், செய்திகளில் தொடா்ந்து இருக்கவும் விரும்புகிறது’ என்று அவா் மேலும் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com