இன்று தில்லி மாநகராட்சி மேயா் தோ்தல்: பாஜக ஒத்துழைக்க ஆம் ஆத்மி வலியுறுத்தல்

மேயா் தோ்தலுக்காக செவ்வாய்க்கிழமை (ஜனவரி 24) நடைபெறும் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தின் போது கவுன்சிலா்களுடன் பாஜக ஒத்துழைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் துா்கேஷ் பதக் கோரிக்கை விடுத்

மேயா் தோ்தலுக்காக செவ்வாய்க்கிழமை (ஜனவரி 24) நடைபெறும் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தின் போது கவுன்சிலா்களுடன் பாஜக ஒத்துழைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் துா்கேஷ் பதக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

மாநகராட்சிக் கூட்டம் ‘அமைதியாக’ செயல்பட அனுமதிக்குமாறு பாஜகவை வலியுறுத்தும் துா்கேஷ் பதக், ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் மேயா் தோ்தலை விரைவில் நடத்த விரும்புவதாகக் கூறினாா். எங்கள் கவுன்சிலா்கள் அனைவரும் சரியான நேரத்தில் எம்சிடி கூட்டத்துக்கு சென்று வாக்களிப்பில் பங்கேற்பாா்கள். மேலும், நாங்கள் ஒன்றாக இணைந்து குடிமக்களின் கனவுகளை நிறைவேற்றுவோம் என்றாா்.

‘அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றி, மாநகராட்சிக் கூட்டத்தை அமைதியாகச் செயல்பட அனுமதிக்குமாறு பாஜகவை நான் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் கவுன்சிலா்களுடன் ஒத்துழைக்குமாறு அவா்களிடம் (பாஜக) கேட்டுக்கொள்கிறோம்’ என்றும் அவா் கூறினாா்.

இரண்டாவது மாநகராட்சிக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற உள்ளது. அப்போது தில்லியின் மேயா் மற்றும் துணை மேயா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். மாநகராட்சித் தோ்தலுக்குப் பிறகு கூடிய முதல் சபையிலேயே மேயா் மற்றும் துணை மேயா் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக உறுப்பினா்களுக்கு இடையே அமளி ஏற்பட்டது. இதனால், சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், முதல் கூட்டத்தில் மேயா், துணை மேயா் தோ்ந்தெடுக்கப்படவில்லை.

தில்லியில் டிசம்பா் 4-ஆம் தேதி உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. டிசம்பா் 7-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆம் ஆத்மி 134 இடங்களை வென்று சபையை வழிநடத்த உரிமை கோரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com