வழக்குரைஞர் பணி பதிவுக் கட்டணம் ரூ.600-ஐ மிகக் கூடாது

நாடு முழுவதும் சட்டப் படிப்பை முடித்து வழக்குரைஞராக பதிவு செய்பவர்களிடம் கட்டணமாக ரூ.600-க்கு மேல் வசூலிக்கப்படக் கூடாது'
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் சட்டப் படிப்பை முடித்து வழக்குரைஞராக பதிவு செய்பவர்களிடம் கட்டணமாக ரூ.600-க்கு மேல் வசூலிக்கப்படக் கூடாது' என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது.

வழக்குரைஞராக பதிவு செய்வதற்கான கட்டணத்தை இந்திய வழக்குரைஞர்கள் சங்கமும் (பிசிஐ) சில மாநில வழக்குரைஞர் சங்கங்களும் சட்ட நடைமுறைகளை மீறி பன்மடங்காக உயர்த்தியுள்ளன. இதை ரத்து செய்து, உரிய கட்டணத்தை வசூலிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், "வழக்குரைஞர் பணிக்கு பதிவு செய்ய ஒடிஸôவில் ரூ.42,100, குஜராத்தில் ரூ. 25,000, உத்தரகண்டில் ரூ.23,650, ஜார்க்கண்டில் ரூ.21,460, கேரளத்தில் ரூ.20,050 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆஜரான பிசிஐ தலைவர், "பிசிஐ தரப்பில் வழக்குரைஞர் பதிவு கட்டணமாக ரூ.15,000 வசூலிக்கப்படுகிறது. பிகாரில் ரூ. 25,000 வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் புற்றுநோய் அல்லது சிறுநீரக பாதிப்புகளுக்கு உள்ளாகும் வழக்குரைஞர்களுக்கு மருத்துவ நிதியுதவி அளிக்கப்படுகிறது' என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், "வழக்குரைஞர் சட்டம் 1961, பிரிவு 24-இன் படி, வழக்குரைஞராக பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 600-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவுக் கட்டணத்தை உயர்த்துவதற்கு நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே, ரூ. 600-க்கும் மேல் பதிவுக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது' என்று குறிப்பிட்டு, தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

சட்டப் படிப்பு காலத்தை குறைக்கக் கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு: பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கான பிஎஸ்சி.,-எல்எல்பி, பி.காம்.-எல்எல்பி, பிபிஏ-எல்எல்பி போன்ற ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்புகளின் காலத்தை 3 ஆண்டுகளாக குறைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்தது.

இந்த மனுவை விசாரணமைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, "வழக்குரைஞர் பணிக்கு சட்ட நுணுக்கங்களில் முதிர்ந்த நபர்கள் வருவது அவசியம். பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கான இந்த ஒருங்கிணைந்த சட்டப் படிப்பின் காலம் 5 ஆண்டுகள் என்பதே மிகக் குறவானதுதான்.

எனவே, இது மாணவர்களுக்கு பலனளிக்கக் கூடிய விஷயம்தான்' என்று குறிப்பிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com