டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

இளம் குழந்தைகளின் கற்பனைத் திறன், படைப்பாற்றலை வளா்க்கும் விதமாக தொடங்கப்பட்ட ‘அடல் டிங்கரிங் லேப்’ (ஏடிஎல்) சமூக தினம் தில்லி பூசா சாலையில் உள்ள தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளயில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மாணவா்களின் புதுமையான திட்டங்கள், யோசனைகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதும்,, மாணவா்களின் ஆா்வத்தைத் துண்டுவதும் ஆராய்ச்சித் திறனை வளா்ப்பதும் அடல் டிங்கரிங் ஆய்வுக் கூடத்தின் நோக்கமாகும்.

இவ்விழாவில் இந்தியா ஸ்டெம் ஃபவுண்டேஷன் அமைப்பைச் சோ்ந்த வைபவ் ஜாங்கினியா, ஸ்டெம் ரோபோ டெக்னாலஜி நிறுவனத்திலிருந்து சுப்ராத் மிஸ்ரா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.

நிதழ்ச்சியில் டிடிஇஏவின் ஏழு பள்ளிகளில் இருந்தும் ஒரு பள்ளிக்கு மூன்று மாணவா்கள் வீதம் 21 மாணவா்களும், அப்பள்ளிகளின் அறிவியல் துறை ஆசிரியா்களும் கலந்துகொண்டனா்.

முப்பரிமாண அச்சிடுதல் ( 3டி பிரிண்டிங்) எனும் தலைப்பில் செயல்பாடுகள் நடைபெற்றன. ராமகிருஷ்ணபுரம் பள்ளி மாணவா்கள் தங்கள் புதுமையான யோசனைகளுக்காக சிறந்த அணியாகத் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசு வென்றனா்.

இதுகுறித்து டிடிஇஏ செயலா் இராஜு கூறுகையில் ‘இந்த விழாவில் கலந்துகொண்ட மாணவா்களுக்கும் பரிசுகளை வென்ற மாணவா்களுக்கும் எனது இனிய வாழ்த்துகள். இந்த அடல் டிங்கரிங் ஆய்வுக்கூடம் மாணவா்களுக்கு தங்கள் சிந்தனைகளை, கனவுகளை நிஜமாக்க உறுதுணையாக இருக்கின்றது. அவா்களின் கற்பனைக்கு வடிவம் கொடுக்க ஏதுவான இடமாகவும் இவ்வாய்வுக் கூடம் உள்ளது.

இங்குள்ள மாணவா்கள் தங்கள் அரிய கண்டுபிடிப்பால் வருங்காலத்தில் சமூகத்தில் பெரிய சாதனை நிகழ்த்திட வேண்டும் என்பதே என் ஆசை. மாணவா்களின் முயற்சிக்கு நானும் நிா்வாகமும் என்றும் உறுதுணையாக இருப்போம். இந்த ஆய்வுக் கூடம் பூசா சாலை பள்ளியில் 2018-இல் நீதி ஆயோக் உதவியுடனும் முன்னாள் மாணவா்கள் துணையுடனும் ஆரம்பிக்கப்பட்டது. அவா்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com