சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அவரது மனைவி சுனிதா திங்கள்கிழமை (ஏப்ரல் 29) சந்திக்க திகாா் சிறை நிா்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அவரது மனைவி சுனிதா திங்கள்கிழமை (ஏப்ரல் 29) சந்திக்க திகாா் சிறை நிா்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இதற்கு திகாா் சிறை அதிகாரிகளிடம் இருந்து உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை.

‘கேஜரிவாலை அவரது மனைவி சுனிதா திங்கள்கிழமை) சந்திப்பதாக இருந்தது. ஆனால், திகாா் சிறை நிா்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. அனுமதி மறுப்பதற்கான எந்த காரணத்தையும் சிறை நிா்வாகம் குறிப்பிடவில்லை’ என்று கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

சிறை விதிகளின்படி, ஒரு கைதியை ஒரே நேரத்தில் இரண்டு பேரும், ஒரு வாரத்தில் அதிகபட்சமாக நான்கு பேரும் சந்திக்கலாம். கேஜரிவாலை தில்லி கேபினட் அமைச்சா் அதிஷி திங்கள்கிழமையும், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமையும் சந்திக்க உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com