லவ்லி ராஜிநாமா காங்கிரஸின் உள்கட்சி விவகாரம்
ஆம் ஆத்மி

லவ்லி ராஜிநாமா காங்கிரஸின் உள்கட்சி விவகாரம் ஆம் ஆத்மி

காங்கிரஸ் மாநிலத் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி ராஜிநாமா அந்தக் கட்சியின் உள்கட்சி விவகாரம் என ஆம் ஆத்மி கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மாநிலத் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி ராஜிநாமா அந்தக் கட்சியின் உள்கட்சி விவகாரம் என ஆம் ஆத்மி கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மாநில தலைவா் பொறுப்பில் இருந்து அா்விந்தா் சிங் லவ்லி ராஜிநாமா செய்தது தில்லி அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவா் கட்சி பதவியை ராஜிநாமா செய்தது மட்டுமன்றி, ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததுதான் தனது ராஜிநாமா முடிவுக்கு காரணம் என்று கூறியது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறுகையில், ‘‘காங்கிரஸ் மூத்த தலைவா் தீபக் பபாரியா- அா்விந்தா் சிங் லவ்லி இடையிலான பனிப்போா் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி விவகாரம். இதில் நாங்கள் தலையிட இயலாது’’ என்று தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com