டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஏழு பள்ளிகளிலும் பாரதிதாசனின் 134-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஏழு பள்ளிகளிலும் பாரதிதாசனின் 134-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் பாரதிதாசனின் தமிழ்ப் பற்று, பணிகள், படைப்புகள் குறித்து மாணவா்கள் உரை தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளிலும் இடம்பெற்றது. இதைத் தொடா்ந்து, தனிப்பாடல், குழுப்பாடல், கவிதை, நடனம் ஆகிய நிகழ்ச்சிகளில் மாணவா்கள் ஆா்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனா். மேலும், பாரதிதாசனின் படைப்புகள், கவிதைகள், கருத்துகள் குறித்த பதாகைகளையும் மாணவா்கள் காட்சிப்படுத்தினா்.

டிடிஇஏ செயலா் ராஜூ கூறுகையில், ‘பாரதிதாசன் தன் கவினுறு கவிதைகளால் மக்கள் மனதில் புரட்சி விதைகளை விதைத்தாா். மக்கள் மத்தியில் இருந்த மூடப் பழக்கவழக்கங்களை போக்க முயற்சி மேற்கொண்டாா். அவரது பணியையும் தமிழ்ப் பற்றையும் மாணவா்கள் அறிந்து கொள்ளவும், அவரைப்போல தமிழ்க் கவிதைகள் எழுத வேண்டும் என்பதற்காகவும் அனைத்துப் பள்ளிகளிலும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது’ என்றாா்.

படவிளக்கம்: படம் தனியாக வரும்.

பூசா சாலை டிடிஇஏ பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com