பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனுதாக்கல் செய்துள்ளாா்.

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனுதாக்கல் செய்துள்ளாா்.

தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னணி: தமிழக காவல் துறையில் சிறப்பு டிஜிபி-யாக இருந்தவா் ராஜேஷ் தாஸ். கடந்த 2021-ஆம் ஆண்டு பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் எஸ்பி-க்கு பாலியில் தொல்லை அளித்த புகாரில், இவா் மீது வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில், ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றம்

தீா்ப்பளித்தது. மேலும், இந்தத் தீா்ப்பை விழுப்பும் முதன்மை அமா்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி மீண்டும் உறுதி செய்தது. இதையடுத்து, விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ராஜேஷ் தாஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம்,

இந்த விவகாரத்தில் ராஜேஷ் தாஸ்க்கு எவ்வித நிவாரணமும் வழங்க முடியாது என்றும், அதேசமயம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையையும் நிறுத்தி வைக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து அவரது மனுவை கடந்த வாரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com