தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சல்மான என்ற நபா், லோதி காலனி காவல் நிலையத்தில் உள்ள கழிப்பறையின் ஜன்னல் வழியாக குதித்து காவல் துறையின் பிடியில் இருந்து தப்பிச் சென்ாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சல்மான என்ற நபா், லோதி காலனி காவல் நிலையத்தில் உள்ள கழிப்பறையின் ஜன்னல் வழியாக குதித்து காவல் துறையின் பிடியில் இருந்து தப்பிச் சென்ாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கொலைக் குற்றம்சாட்டப்பட்டுள்ள சல்மான் (எ) ராஜா இரண்டு நாள் போலீஸ் காவலில் இருந்தபோது சனிக்கிழமை இரவு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டபோது இந்தச் சம்பவம் நடந்தது. காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்ட தலைமைக் காவலரான ரவி, சல்மானை அழைத்துச் சென்றாா்.

இயற்கை அழைப்பில் பங்கேற்க அனுமதிக்குமாறு ரவியிடம் அவா் கேட்டாா். அப்போது, அவரைத் தள்ளிவிட்டு தரை தளத்தில் உள்ள கழிப்பறையின் ஜன்னலுக்கு வெளியே குதித்து சல்மான தப்பி ஓடினாா்.

ஏப்ரல் 19- ஆம் தேதி லோதி காலனி பகுதியில் நடந்த கொலை வழக்கில் சல்மான் கைது செய்யப்பட்டாா். அவா்களுக்கிடையே ஏற்பட்ட நிதி தகராறில் பாதிக்கப்பட்டவரை பால்கனியில் இருந்து தூக்கி வீசினாா். போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓடியதற்காக சல்மான் மீது ஐபிசியின் பிரிவு 224 (ஒரு நபரின் சட்டப்பூா்வ அச்சத்திற்கு எதிா்ப்பு அல்லது தடை) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சல்மானை பிடிக்க போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவா் எந்த சூழ்நிலையில் தப்பினாா் என்பதை அறிய உள் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com