தூத்துக்குடி, டிச. 19: தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவுத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்களை மாவட்ட ஆட்சியர் சி.நா. மகேஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்குதல் தொடர்பாக பொதுமக்களின் புகார்களை மாவட்ட அளவில் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி நகராட்சி மற்றும் 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் தனியாக புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளைத் தீர்க்க அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) 0461-2340787, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் 0461-2326901, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் 04632-220404, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் 0461-2271222, கருங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் 04630-263225, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் 04630- 255248, ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய ஆணையர் 04639- 273228, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் 04639-242251, உடன்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் 04639-250273, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் 04639- 266207, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் 04632-220308, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய ஆணையர் 04632-261226, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் 0461-2366232, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் 04638- 233128, புதூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் 04638- 252226 ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
தங்கள் பகுதிகளில் செயல்படும் மதிய உணவு திட்டங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பான மனுக்களை தங்கள் பகுதிக்குரிய அலுவலர்களிடம் அலுவலகத் தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ அளித்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இத்திட்டத்தில் செயல்படும் அனைத்துப் பணியாளர்களும் பொதுமக்கள் குறை கூறாவண்ணம் சிறப்பாக பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.