தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் முறையாக பராமரிக்கப்படாத பசுக்கள்

தென்காசி, ஜன. 30:  தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் காணிக்கையாக வழங்கப்பட்ட பசுக்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்று பக்தர்கள் புகார் கூறுகின்றனர்.   தமிழகத்தின் மிகபெரிய சிவாலயங்களில் தென்காசி அர
Updated on
1 min read

தென்காசி, ஜன. 30:  தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் காணிக்கையாக வழங்கப்பட்ட பசுக்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்று பக்தர்கள் புகார் கூறுகின்றனர்.

  தமிழகத்தின் மிகபெரிய சிவாலயங்களில் தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயிலும் ஒன்று. இங்கு பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டி காணிக்கையாக பசுக்களைத் தானமாக வழங்குகின்றனர்.

இவ்வாறு வழங்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 6. இதுதவிர ஒருகாளையும், 6 கன்றுக்குட்டிகளும் உள்ளன.

  பசுக்களைப் பராமரிக்க முறையான மாட்டுத் தொழுவம் இல்லை. கோயிலின் சுற்றுப் பாதையில் அமைந்துள்ள சகஸ்ரலிங்கம் சன்னதி முன்பாக பசுக்களைக் கட்டியுள்ளனர்.

இப் பகுதியில்தான், பசுக்களின் கழிவுகளையும் சேகரித்து வைத்துள்ளனர்.

  இந்த உரக்கழிவுகளை அகற்றாமல் சேகரித்து வைத்துள்ளதால் அப் பகுதியில் சுகாதாரக் கேடுகள் மிகுந்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் பசுக்கள் கோயிலின் சுற்றுபகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன.

  இதனால், அனைத்து பகுதியிலும் கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், பசுக்களுக்கும் நோய்பரவும் அபாயம் உள்ளது.

மேலும், கோயிலுக்கு பின்பிறம் நன்கொடையாளர் ஒருவரால், மாட்டுத்தொழுவம் கட்டப்பட்டு வருகிறது.

  இப் பணிகளை விரைந்து முடித்து, நல்ல குடிதண்ணீர் மற்றும் மின்சார வசதியுடன் விரைவில் செயல்படுத்த வேண்டும் என்பது பக்தர்களின் விருப்பம்.

இதுகுறித்து, இக்கோயிலில் செயல்பட்டு வரும் பிரதோஷ குழுவினர் கூறும்போது, இங்கு பசுக்களை முறையாகப் பராமரிப்பதில்லை, அவைகளுக்குத் தேவையான மாட்டுத்தீவனம், புல், வைக்கோல் வழங்குவதில்லை.

மேலும் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றவேண்டும். கடந்த 6 மாத காலமாக கோயிலுக்கு நிர்வாக அதிகாரி இல்லாமல் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே உடனடியாக நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com