காயல்பட்டினம் புறவழிச் சாலையில் விபத்து: மின்கம்பத்தில் மோதி கார் எரிந்தது: 5 பேர் காயம்

ஆறுமுகனேரி, மே 11:  காயல்பட்டினம் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை நடந்த விபத்தில் கார் மின் கம்பத்தில் மோதியதால் தீப்பற்றி எரிந்தது. இதில் காரில் பயணம் செய்த மூன்று பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
Updated on
1 min read

ஆறுமுகனேரி, மே 11:  காயல்பட்டினம் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை நடந்த விபத்தில் கார் மின் கம்பத்தில் மோதியதால் தீப்பற்றி எரிந்தது. இதில் காரில் பயணம் செய்த மூன்று பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

 காயல்பட்டினம் கோமான் மேலத் தெருவைச் சேர்ந்தவர் காசிம் சேட் மகன் ஷேக் முகைதீன் (42), சமையல்காரர். இவரது மனைவி ஜெய்னம்பு நாச்சி (40). இவருக்கு  தூத்துக்குடி மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க காரில் சென்றனர்.

காரை ஷேக் முகைதீன் தம்பி பெரிய நெசவு தெரு அப்துல் லத்தீப் ஓட்டி வந்தாராம்  அவருடன் அவர்களது உறவினர்களான பெரிய நெசவு தெரு அப்பாஸ் மனைவி சம்சுபீவி (45) மற்றும் கோமான் புதூர் முத்துமொகுதூம் மகள் உûஸனிய்யா (23) சென்றுள்ளனர்.

 காரில் தூத்துக்குடி சென்று விட்டு, அனைவரும் காயல்பட்டினம் திரும்பி கொண்டிருந்தனர். கார் காயல்பட்டினம் புறவழிச்சாலையில் பேயன்விளை விலக்கு அருகே சென்ற போது கட்டுப்பாட்டினை இழந்து வலது புறம் உள்ள மின் கம்பத்தில் மோதி அதனருகில்  நின்ற மோட்டார்சைக்கிள் மீது மோதி சாலையின் இடது புறம் தூக்கி வீசப்பட்டது.

 இதில்  கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்து விட்டது. காரிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய ஷேக் முகைதீன், அவரது மனைவி ஜெய்னம்பு நாச்சி, தம்பி அப்துல் லத்தீப்,உறவினர்கள் சம்சுபீவி மற்றும் உஸôனிய்யா ஆகிய 5 பேரும் லேசான காயங்களுடன் காயல்பட்டினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

  சம்பவ இடத்தை ஆறுமுகனேரி காவல்நிலைய ஆய்வாளர் பார்த்தீபன், உதவி ஆய்வாளர்கள் பெருமாள் ஆகியோர் பார்வையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com