புத்தேரி ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணி

நாகர்கோவில், பிப். 25: நாகர்கோவில் புத்தேரியில் ரூ. 21.40 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.   நாகர்கோவில்- புத்தேரி இடையே போக்குவரத்த

நாகர்கோவில், பிப். 25: நாகர்கோவில் புத்தேரியில் ரூ. 21.40 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

  நாகர்கோவில்- புத்தேரி இடையே போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை போக்கவும், புத்தேரி ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் நீண்டநாள்களாக கோரிக்கை விடுத்துவந்தனர்.

  இதையடுத்து, ரயில்வே மேம்பாலம அமைக்க அரசு அனுமதி அளித்தது. இந்த மேம்பால கட்டுமானப் பணி தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

  புத்தேரி ரயில்வே கேட் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பணிகளை தொடங்கிவைத்தபின் செய்தியாளர்களிடம் அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறியதாவது:

  இந்த மேம்பாலப் பணிக்கு அண்மையில் நாகர்கோவிலுக்கு வந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டியிருந்தார்.

  ரூ. 21.40 கோடியில் இந்த பணி நடைபெறவுள்ளது. ஓராண்டுக்குள் இந்த கட்டுமானப் பணிகள் நிறைவுபெறும்.

  சுனாமியின்போது மேலமணக்குடி- கீழமணக்குடி இடையே அமைக்கப்பட்டிருந்த இணைப்பு பாலம் முழுவதும் சேதமடைந்தது. இந்த பாலத்தை கட்டும்பணி வரும் மார்ச் 10-ம் தேதி தொடங்கவுள்ளது என்றார் அமைச்சர்.

  நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் அ. ராஜன், எஸ். ஜெயபால், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நெடுஞ்செழியன், ஊராட்சி ஒன்றியத் தலைவர் கோலம்மாள், புத்தேரி ஊராட்சித் தலைவர் மாரிமுத்து, நகர்மன்ற உறுப்பினர்கள் முத்துசெல்வி, ராமகிருஷ்ணன், சுந்தர்ராஜ், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் ஹரிராஜ், கண்காணிப்புப் பொறியாளர் ஸ்ரீரங்கன், கோட்டப் பொறியாளர் அனந்தசயனம், கண்காணிப்புப் பொறியாளர் ராஜாராமன், கோட்டப் பொறியாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com