களியக்காவிளை, ஜன. 8: களியக்காவிளை அருகே முன்விரோதம் காரணமாக வீடுபுகுந்து மிரட்டி, பணம் பறித்துச் சென்றவரை போலீஸôர் தேடி வருகிறார்கள்.
களியக்காவிளை அருகேயுள்ள மலையடி, வடக்கேதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சுகிருஷ்ணன் மகன் அம்பி (45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுகுமாரனுக்கும் இடையே சொத்து தகராறும், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறும் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை சுகுமாரன், அம்பியின் வீட்டில் புகுந்து அவரை மிரட்டி, அவரிடமிருந்து ரூ. 15 ஆயிரத்தைப் பறித்துச் சென்றாராம்.
இது குறித்து, பளுகல் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.