தெற்குகள்ளிகுளத்தில் பெண் வழக்குரைஞர் கைது

வள்ளியூர், நவ. 29:தெற்குகள்ளிகுளத்தில் தெருவில் குண்டுகற்களை குவித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக பெண் வழக்குரைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.   தெற்குகள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் அமலோற
Updated on
1 min read

வள்ளியூர், நவ. 29:தெற்குகள்ளிகுளத்தில் தெருவில் குண்டுகற்களை குவித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக பெண் வழக்குரைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

  தெற்குகள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் அமலோற்பவ அல்பின் (65). இவரது மகள் ரோஸ் ஸ்வீட்டி(40). வழக்குரைஞர்.

  இவர்கள் இருவரும், தாங்கள் வசித்து வரும் நவமணி தெருவில் குண்டுகற்களை லாரி மூலம் கொண்டுவந்து குவித்தனராம். இதனால், அவ் வழியே வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டதாகக் கூறப்படுகிறது.   இதை அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் அந்தோனி தட்டிக்கேட்டாராம். இதனால், அவருக்கு இருவரும் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

  இதுகுறித்து வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல் நிலைய ஆய்வாளர் பால்ராஜ் வழக்குப்பதிந்து ரோஸ் ஸ்வீட்டியை கைது செய்தார். அமலோற்பவ அல்பினை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com