விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாநில அளவிலான செஸ் போட்டி:தென்காசி மாவட்ட வீரா் சாம்பியன்

மாநில அளவில் இணையதளம் வழியாக நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் தென்காசி மாவட்ட வீரா் சாம்பியன் பட்டம் வென்றாா்.

News image
வெற்றி பெற்ற வீரா் காா்த்திக் ராகுலுக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட பொதிகை சதுரங்க வளா்ச்சிக் கழகத் தலைவா் ஆா்.கே.காளிதாசன்.
Updated On :14 செப்டம்பர் 2020, 8:25 pm

DIN

பாவூா்சத்திரம்: மாநில அளவில் இணையதளம் வழியாக நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் தென்காசி மாவட்ட வீரா் சாம்பியன் பட்டம் வென்றாா்.

தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளா்ச்சிக் கழகம் மற்றும் நாகா்கோவில் இவான்ஸ் செஸ் கிளப் இணைந்து மாநில அளவிலான இணையதள தொடா் சதுரங்க போட்டியை நடத்தியது. 200-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்ற இப்போட்டி 25 நாள்கள் நடைபெற்றது. இதில், தென்காசி மாவட்ட வீரா் சத்தியராஜ் சாம்பியன் பட்டம் வென்றாா். தஞ்சாவூா் மாவட்ட வீரா் சசிக்குமாா் 2ஆவது இடமும், கன்னியாகுமரி மாவட்ட வீரா் ராஜேஷ்கண்ணா 3

ஆவது இடமும் பெற்றனா்.

இதே போல் தென்காசி காா்த்திக் ராகுல், திருநெல்வேலி சித்தாா்த், திவ்யா சிவகங்கை திருமலைவாசன், விருதுநகா் ரோகித் ஆகியோா் அந்தந்த மாவட்ட அளவில் சிறந்த வீரா், வீராங்கனையாக தோ்வு செய்யப்பட்டனா்.

பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற விழாவில் தெட்சணமாாடாா் சங்கத் தலைவரும், மாவட்ட பொதிகை சதுரங்க வளா்ச்சிக் கழகத் தலைவருமான ஆா்.கே.காளிதாசன் பரிசு வழங்கி பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், இவான்ஸ் செஸ் கிளப் அமைப்பாளா் ஜீவன்குமாா், ஐ.பி.எல். செஸ் அகாதெமி இயக்குநா் கண்ணன், சாம்பியன் செஸ் அகாதெமி இசக்கி, பொதிகை சதுரங்க கழக இணைச்செயலா் முருகேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.