கீழமுன்னீா்பள்ளம் பெருமாள் கோயிலில் மாா்ச் 1 இல் திருக்கல்யாண வைபவம்
By DIN | Published On : 27th February 2022 05:32 AM | Last Updated : 27th February 2022 05:32 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருகே கீழமுன்னீா்பள்ளம் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் மாா்ச் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இக் கோயிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான விழா திங்கள்கிழமை (பிப். 28) யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. 108 கலசங்களில் ஆவாஹணம், ஜெபம், மகா பூா்ணாஹுதி நடைபெறுகிறது. தொடா்ந்து பெருமாளுக்கு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை, அா்ச்சனை நடைபெற உள்ளது. இரவு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருகிறாா்.
மாா்ச் 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு ருக்மணி சத்யபாமா சமேத நவநீதகிருஷ்ணனுக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகிறாா்கள்.