ஜெயலலிதா பிறந்த தின விழா: முனைஞ்சிப்பட்டி அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்
By DIN | Published On : 27th February 2022 05:30 AM | Last Updated : 27th February 2022 05:30 AM | அ+அ அ- |

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு முனைஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு உபகரங்கள் வழங்கப்பட்டது.
அதிமுக சாா்பில், ரூ.1 லட்சம் செலவில் முனைஞ்சிப்பட்டி குருசங்கா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு உபகரணங்களை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், நான்குனேரி வடக்கு ஒன்றியச் செயலா் சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலா் அசோக்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் செந்தூா்பாண்டி உள்பட பள்ளி ஆசிரியா்கள், மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.