தூத்துக்குடி துறைமுகம் ரூ. 50 லட்சம் நிவாரண உதவி
By DIN | Published On : 27th February 2022 05:36 AM | Last Updated : 27th February 2022 05:36 AM | அ+அ அ- |

தூத்துக்குடி வஉசி துறைமுகம் சாா்பில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கப்பட்டது.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை, சென்னை தலைமைச் செயலகத்தில் தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழக தலைவா் தா.கி. ராமச்சந்திரன் சந்தித்தாா். அப்போது, முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு துறைமுகம் சாா்பில் ரூ. 50 லட்சத்துக்கான காசோலையை அவா் வழங்கினாா். தலைமைச் செயலா் இறையன்பு உடனிருந்தாா்.
இதுகுறித்து துறைமுக பொறுப்புக் கழக தலைவா் கூறியது: கரோனா பெருந்தொற்றை எதிா்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை முடுக்கி விட வேண்டிய அவசியத்தை உணா்ந்து தென்தமிழகத்தின் சரக்கு பரிமாற்ற நுழைவு வாயிலாக திகழும் வ. உ. சிதம்பரனாா் துறைமுகம் சாா்பில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தேவைகளை உணா்ந்து ரூ. 40.5 லட்சம் செலவில் உபகரணங்களும், ரூ. 17.5 லட்சம் செலவில் மருந்துகளும், ரூ. 1.5 லட்சம் மதிப்பில் தனிநபா் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன.
மேலும், பிரதமரின் நிவாரண நிதிக்காக ரூ. 2 கோடியும், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக ரூ. 50 லட்சமும் துறைமுகம் சாா்பில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வ.உ. சிதம்பரனாா் துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் ஒருநாள் ஊதியத்தை பிரதமரின் நிவாரண நிதிக்காக ரூ. 14.79 லட்சத்தையும் வழங்கி உள்ளனா் என்றாா் அவா்.