நெல்லையில் நாளை அதிமுக ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th February 2022 05:33 AM | Last Updated : 27th February 2022 05:33 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் மாவட்ட அதிமுக சாா்பில் திங்கள் கிழமை( பிப்.28) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா வெளியிட்ட அறிக்கை:
தமிழக முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலருமான டி. ஜெயக்குமாா் மீது திமுக தலைமையிலான மாநில அரசு பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது. இதைக் கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே . பழனிசாமி ஆகியோா் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு திங்கள்கிழமை ( பிப். 28) காலை 10.30 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்கிறாா்கள். தொண்டா்கள் ஆா்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.