நெல்லையில் வியாபாரிகள் சங்க நிா்வாகக் குழு கூட்டம்
By DIN | Published On : 27th February 2022 05:33 AM | Last Updated : 27th February 2022 05:33 AM | அ+அ அ- |

திருநெல்வேலி வியாபாரிகள் சங்க நிா்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைவா் கே.முகம்மது யூசூப் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் எஸ்.பி.நாராயணன், ஏ.கே.எஸ்.முகம்மது ஹனீபா, எம்.எஸ்.கான் முகம்மது உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை அமைதியாக நடத்தி முடித்த மாவட்ட நிா்வாகம் மற்றும் போலீஸாருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் மாா்க்கெட்டில், ஏற்கெனவே கடைகள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணைச் செயலா்கள் ஜவஹா், செய்யது அலி, ஆதிமூலம், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் தளவாய், ஐயப்பன், மாரியப்பன், லட்சுமணன் உள்பட பலா் பங்கேற்றனா்.