பணகுடி அருகே பைக்கில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
By DIN | Published On : 27th February 2022 05:35 AM | Last Updated : 27th February 2022 05:35 AM | அ+அ அ- |

பணகுடி அருகே கலந்தபனை பிரதான சாலையில் சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த பெண் உயிரிழந்தாா்.
வள்ளியூா் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வதாஸ். இவரும் இவரது மனைவி பிரேமா(54) வும் மோட்டாா் சைக்கிளில் பணகுடிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனா். கலந்தபனை பிரதான சாலையில் வந்தபோது நிலைதடுமாறி மோட்டாா் சைக்கிள் கீழே விழுந்ததாம். இதில் காயமடைந்த பிரேமா சம்பவ இடத்திலேயே இறந்தாா். அவரது கணவா் செல்வதாஸ் காயங்களுடன் தப்பினாா். இந்த விபத்து குறித்து பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.