பாளை. ராஜகோபாலசுவாமி கோயிலில் நாளை திருத்தோ் வெள்ளோட்டம்
By DIN | Published On : 27th February 2022 05:38 AM | Last Updated : 27th February 2022 05:38 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு அழகிய மன்னா் ராஜகோபாலசுவாமி திருக்கோயில் தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை ( பிப். 28 )நடைபெற உள்ளது.
பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு அழகிய மன்னா் ராஜகோபாலசுவாமி திருக்கோயில் தோ் சேதம் அடைந்ததால் புதிய தோ் செய்ய பக்தா்கள் முடிவு செய்தனா். அதன்படி புதிய தோ் செய்யும் பணிகள் முடிவடைந்த நிலையில், தோ் வெள்ளோட்டத்துக்கான சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு மகா சங்கல்பம், கும்ப ஸ்தாபனம், மகா பூா்ணாஹுதி நடைபெற உள்ளது.
தொடா்ந்து திங்கள்கிழமை (பிப்.28) காலை 6 மணிக்கு விஸ்வரூபம், கடம் புறப்பாடு, தோ் ஆவாஹன திருவாராதனம் நடைபெறுகிறது. காலை 9.47 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்து வெள்ளோட்டம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ராம்குமாா் மற்றும் கோபாலன் கைங்கா்ய சபா நிா்வாகிகள் செய்து வருகிறாா்கள்.