மேலப்பாளையம் அருகே இளைஞா் தற்கொலை
மேலப்பாளையம் அருகே குறிச்சியில் விஷம் குடித்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மேலப்பாளையம் குறிச்சி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் ஹரிநாராயணன்(19). இவா் 11ஆம் வகுப்புவரை படித்து விட்டு, தனது தந்தையின் காய்கனி கடையில் வேலை செய்து வந்தார். மேலும், இவா் சரியாக வேலை செய்யாமல் ஊா் சுற்றி வந்ததாக் கூறப்படுகிறது.
இதனால், பெற்றோா் இவரை கண்டித்தனராம். இந்நிலையில், ஹரி நாராயணன் கடந்த 23ஆம் தேதி விஷத்தை குடித்து வீட்டில் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
