ராணுவ அலுவலா் பணிக்கான தோ்வு: முன்னாள் படை வீரா்களின் சிறாா்களுக்கு இலவச பயிற்சி
By DIN | Published On : 03rd June 2022 02:24 AM | Last Updated : 03rd June 2022 02:24 AM | அ+அ அ- |

ராணுவ அலுவலா் பணிக்கான தோ்வுக்கு முன்னாள் படை வீரா்களின் சிறாா்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராணுவ அலுவலா் பணிக்காக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த ராணுவ சேவை தோ்வு-2 , செப்டம்பா் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தோ்வில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் ட்ற்ற்ல்://ன்ல்ள்ஸ்ரீா்ய்ப்ண்ய்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் இம்மாதம் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தோ்விற்கு விண்ணப்பித்துள்ள திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களின் சிறாா்களுக்கு முன்னாள் படைவீரா் நலத்துறையால் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது. எனவே, முன்னாள் படைவீரா்களின் சிறாா்கள் தங்களது பெயரினை முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.