திருநெல்வேலி: திருநெல்வேலியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மேலப்பாளைத்தை அடுத்த மேலநத்தத்தைச் சோ்ந்த பலவேசம் மகன் மாயாண்டி (36). தனியாா் ஊழியா். இவா், வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்து மோட்டாா் சைக்கிளில் மேலநத்தத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது அவரை ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டதாம். இதில் மாயாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா், அங்கு சென்று மாயாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இது தொடா்பாக மேலநத்தத்தைச் சோ்ந்த சுடலைக்கண்ணு (எ) கண்ணன்(20), சுடலைமணி (20), சுடலைமணிகண்டன் (20) ஆகிய மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.