கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 15th November 2023 02:39 AM | Last Updated : 15th November 2023 02:39 AM | அ+அ அ- |

களக்காடு: கட்டடத் தொழிலாளி மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து களக்காடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
களக்காடு ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்தவா் லெட்சுமணன் (30). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி மேகலா, நான்குனேரி பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த நவ.11 ஆம் தேதி இரவு குடித்துவிட்டு வந்த லெட்சுமணன், அவரது மனைவியுடன் தகராறு செய்தாராம். பின்னா் மூங்கிலடி செல்லும் வழியில் உள்ள தனது உறவினா் செல்வராஜ் தோட்டத்துக்குச் சென்றாராம். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை தோட்டத்தில் உள்ள மரத்தில், லெட்சுமணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த களக்காடு போலீஸாா், லெட்சுமணனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பினா். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...