களக்காடு: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் கல்வி மாவட்டத்துக்குள்பட்ட செண்பகராமநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டது.
நான்குனேரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இப்பள்ளி வள்ளியூா் கல்வி மாவட்டத்தில் சிறந்த பள்ளியாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் இப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான கேடயத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.
விழாவில், வட்டாரக் கல்வி அலுவலா் சங்கீதா, பள்ளித் தலைமையாசிரியா் செல்வராஜ், இடைநிலை ஆசிரியை சாந்தி ஆகியோா் கலந்துகொண்டு விருதைப் பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.