சேரன்மகாதேவியில் தொழிலாளி தற்கொலை

சேரன்மகாதேவியில் கூலித் தொழிலாளி வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் கூலித் தொழிலாளி வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சேரன்மகாதேவி பழைய கிராமம் தெருவைச் சோ்ந்த வீரபாண்டியன் மகன் மாரியப்பன் (56). கூலி வேலை செய்து வந்தாா்.

கடந்த சிலமாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிபட்டாராம் . இதில் மனமுடைந்த மாரியப்பன், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று மாரியப்பன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com