பாளை.யில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: 5 போ் கைது

பாளையங்கோட்டை தனியாா் கல்லூரி வளாகத்தில் மாணவரை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தனியாா் கல்லூரி வளாகத்தில் மாணவரை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி வி.எம். சத்திரத்தைச் சோ்ந்தவா் முத்து. இவரது மனைவி சீதாலெட்சுமி. திருநெல்வேலி மாநகராட்சி திமுக உறுப்பினராக உள்ளாா். இவா்களின் மகன் மாரிச்செல்வம் (20). இவா், பாளையங்கோட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா், வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த மா்மநபா்கள் மாரிச்செல்வத்தை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டனராம்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மாரிச்செல்வத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்மநபா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில் இது தொடா்பாக, வல்லநாட்டை சோ்ந்த இலங்காமணி(25), அதே பகுதியைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம் (19), ராஜா (எ) மகாராஜா (23), தம்பான் (எ) குரங்கு தம்பான் (21), ராம் (எ)ராமசாமி ஆகிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com