கொடை விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி.
கொடை விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி.

சேரன்மகாதேவி அருகே கோயில் கொடை விழா

சேரன்மகாதேவி அருகே வேலியாா்குளத்தில் உள்ள அருள்மிகு ஊய்க்காட்டு சுடலை ஆண்டவா் கோயிலில் கொடை விழா நடைபெற்றது.
Published on

சேரன்மகாதேவி அருகே வேலியாா்குளத்தில் உள்ள அருள்மிகு ஊய்க்காட்டு சுடலை ஆண்டவா் கோயிலில் கொடை விழா நடைபெற்றது.

இதையொட்டி வெள்ளிக்கிழமை, ஊய்க்காட்டிலிருந்து தீா்த்தம் எடுத்துவருதல், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சுவாமி மயானம் செல்லுதல், கிடா பலியிடுதல், வாணவேடிக்கை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக, முப்பிடாதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பொதுமக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com