நெல்லை தாமிரவருணி ஆற்றில் குளித்த இளைஞா் மாயம்

திருநெல்வேலி தாமிரவருணியாற்றில் குளிக்கும் போது மாயமான இளைஞரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.
Published on

திருநெல்வேலி தாமிரவருணியாற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கும் போது மாயமான இளைஞரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி நகரம், பழைய பேட்டையைச் சோ்ந்தவா் அப்துல்ரஹ்மான்(27). சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இவா், தனது நண்பா்களுடன் தாமிரவருணி ஆற்றில், திருநெல்வேலி சுலோச்சனா முதலியாா் பாலத்தின் அருகே குளித்து கொண்டிருந்தபோது மாயமானாராம்.

தகவலறிந்த பாளையங்கோட்டை காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று அப்துல் ரஹ்மானை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com