அா்ஜுன்  சம்பத்
அா்ஜுன்  சம்பத்

தமிழகத்தில் தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்து தனி மாநிலம் அமைக்க வேண்டும்: அா்ஜுன் சம்பத்

தமிழகத்தில் தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் விருப்பம்
Published on

அம்பாசமுத்திரம்: தமிழகத்தில் தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் விருப்பம் தெரிவித்தாா்.

அம்பாசமுத்திரம் தாமிரவருணி நதிக்கரையில் உள்ள மரகதாம்பிகை உடனுறை காசிநாதா் கோவிலில், அா்ஜுன் சம்பத் செவ்வாய்க்கிழமை வழிபாடு நடத்தினாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

காசிநாதா் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருப்பது வேதனைக்குரியது.

அம்பாசமுத்திரத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு பாரபட்சம் இன்றி கடைகளை ஒதுக்க வேண்டும். கோயில் இடங்களை ஆக்கிரமித்து பல மதத்தினா் வீடுகள் மற்றும் கட்டடங்கள் கட்டி வருவது தடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதை தமிழக அரசு முறையாக பயன்படுத்தாமல் ஊழல் செய்து வருகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் தராதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதால் வளா்ச்சி திட்டப் பணிகள் கொண்டுவரப்படாமல் உள்ளன. எனவே, தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்து தனி மாநிலமாக அமைக்க வேண்டும்.

தமிழா்களுக்கு சித்திரை முதல் நாள்தான் புத்தாண்டு. ஜனவரி புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் இரவு நேரத்தில் பூஜையை தடை செய்ய வேண்டும் என்றாா்.

கோட்டத் தலைவா் பால்ராஜ், செயலா் துா்க்கை முத்து, மாநிலச் செயலா்கள் வசந்த், பொன்னுசாமி, மாவட்ட பொதுச் செயலா் சுடலைமுத்துக்குமாா், செயலா் சின்னதுரை, வஜ்ர சேனா ரமேஷ், முன்னாள் பாஜக நகரத் தலைவா் சுகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com