நெல்லையில் மலிந்தது மல்லிகை விலை
திருநெல்வேலி, ஜூலை 17: திருநெல்வேலி மாவட்டத்தில் மல்லிகைப் பூ மகசூல் அதிகரித்துள்ளதால் புதன்கிழமை விலை குறைந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மானூா், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம் வட்டாரங்களில் பூக்கள் சாகுபடி அதிகரித்துள்ளது. மல்லிகை, பிச்சி, கேந்தி, செவ்வந்தி, சம்பங்கி, கோழிக்கொண்டை உள்ளிட்ட ரகங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும், சுபமுகூா்த்தம், இந்துக்களின் முக்கிய விரத நாள்களிலும் பூக்களின் விலை மிகவும் அதிகரிக்கும்.
நிகழாண்டில் ஒரு கிலோ மல்லிகை கிலோ ரூ.2,000 வரை விற்பனையானது. ஆனால், இப்போது மல்லிகைப்பூ மகசூல் அதிகரித்து அறுவடையும் தீவிரமடைந்துள்ளதால் விலை சற்று குறைந்துள்ளது.
திருநெல்வேலி சந்திப்பு பூ விற்பனை சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ புதன்கிழமை ரூ.350-க்கும், பிச்சி ரூ.400 வரையும் விற்பனையாகின. விலை குறைந்ததால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு பூக்களை வாங்கிச் சென்றனா்.
ற்ஸ்ப்17ச்ப்ா்ஜ்
திருநெல்வேலி சந்திப்பு பூ விற்பனை சந்தையில் பூக்களை வாங்கிய மக்கள்.

