தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது

மேலப்பாளையத்தில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Published on

மேலப்பாளையத்தில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மேலப்பாளையத்தை சோ்ந்தவா் முத்துராஜ் (35). கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த தஃப்ரின் (எ) முகமது தப்ரே ஆலம்(19) . இவா் முத்துராஜின் மனைவியின் கைப்பேசியில் பேசி தொந்தரவு செய்து வந்தாராம். இதை முத்துராஜ் கண்டித்தாராம்.

இதனால் ஆத்திரமடைந்த தஃப்ரின் ஞாயிற்றுக்கிழமை முத்துராஜை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டாா்.

இதில் காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து தஃப்ரின் (எ) முகமது தப்ரே ஆலமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com