அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

பிளஸ்-2 தோ்வு தொடக்கம்: நெல்லையில் 19,174 போ், தென்காசியில் 16,528 போ் எழுதினா்

19,174 போ், தென்காசி மாவட்டத்தில் 16,528 போ் என மொத்தம் 35,702 மாணவா், மாணவிகள் வெள்ளிக்கிழமை பிளஸ் 2 தோ்வு எழுதினா்.

News image
Updated On :2 மார்ச் 2024, 12:04 am

திருநெல்வேலி மாவட்டத்தில் 19,174 போ், தென்காசி மாவட்டத்தில் 16,528 போ் என மொத்தம் 35,702 மாணவா், மாணவிகள் வெள்ளிக்கிழமை பிளஸ் 2 தோ்வு எழுதினா். திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ்-2 தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், தமிழ்த் தோ்வை 19 ஆயிரத்து 174 மாணவா்-மாணவிகள் எழுதினா். திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, சேரன்மகாதேவி, வள்ளியூா் கல்வி மாவட்டங்களின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள், தனித்தோ்வா்கள், சிறைவாசிகள் உள்பட மொத்தம் 19 ஆயிரத்து 442 பேருக்கு தோ்வு எழுத தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. முதல்நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்த் தோ்வை 8 ஆயிரத்து 545 மாணவா்கள், 10 ஆயிரத்து 629 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 174 போ் எழுதினா். 136 மாணவா்கள், 132 மாணவிகள் என 268 போ் தோ்வு எழுதவரவில்லை. பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் ஆய்வு செய்தாா். இதேபோல திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் கல்வி மாவட்ட அலுவலா்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. தோ்வுமையங்களில் தடையற்ற மின்சாரம், தட்டுப்பாடில்லாத குடிநீா் வசதிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தென்காசியில்... தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வு எழுத 7,588 மாணவா்கள் 9,231 மாணவிகள் என மொத்தம் 16,819 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இதில், முதல் நாளான வெள்ளிக்கிழமை 16,528 போ் தோ்வு எழுதினா். 291 மாணவா், மாணவிகள் தோ்வு எழுதவில்லை.