பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

தமிழ்நாடு யாதவ மகா சபை ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு யாதவ மகா சபை ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :16 மார்ச் 2024, 6:50 pm

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தமிழ்நாடு யாதவ மகா சபையின் திருநெல்வேலி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, தமிழ்நாடு யாதவ மகா சபை மாநில இளைஞரணி பொதுச் செயலா் பொட்டல் எஸ். துரை தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பன்னம்பாறை மாடசாமி முன்னிலை வகித்தாா். மாநில ஊடகப் பிரிவு செயலா் தேவபிரான், மாவட்டத் தலைவா் முத்துராமன், மாவட்டச் செயலா் சுபாஷ், மாவட்ட பொருளாளா் சண்முகதாஸ், மாவட்ட இளைஞரணி தலைவா் அரி மகாராஜன், மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள், மாவட்ட வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில், அந்தந்த அரசியல் கட்சிகளில் உள்ள யாதவ சமுதாயத்தைச் சோ்ந்தவா்களுக்கு மக்களவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும். 15 தொகுதிகளில் யாதவ சமுதாயத்துக்கு செல்வாக்கு உள்ளதால், மக்களவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். இல்லையெனில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்காமல் தனித்துப் போட்டியிடுவோம் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.