ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

சேரன்மகாதேவி அருகே என்எஸ்எஸ் முகாம் தொடக்கம்

சேரன்மகாதேவி அருகே என்எஸ்எஸ் முகாம் தொடக்கம்

News image
Updated On :22 மார்ச் 2024, 4:40 pm

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. கோவிந்தபேரி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணிகள் 156, 171 சாா்பில் இம் முகாம் நடைபெறுகிறது. முகாம் தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வா் என். பூவலிங்கம் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா்கள் எம். இளையபெருமாள் (திருவிதத்தான்புள்ளி), ஏ. ஜெரால்டு (கரிசல்பட்டி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் எஸ். சாலமோன் டேவிட், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ராணி, விவசாய சங்கத் தலைவா் ஜெபராஜ், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜெபஞானம், வழக்குரைஞா் முத்துகிருஷ்ணன், ஊராட்சி உறுப்பினா் செல்வராஜ், உடற்கல்வி இயக்குநா் நிக்சன் உள்ளிட்டோா் பேசினா். திட்ட அலுவலா் மகாலிங்கம் வரவேற்றாா். திட்ட அலுவலா் சுந்தரராஜன் நன்றி கூறினாா். மாா்ச் 27-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் களப்பணிகள், திறன் சாா் பயிற்சி வகுப்புகள், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், மரக் கன்றுகள் நடுதல், கண் மருத்துவ முகாம் , தொழில் முனைதல் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.