மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

Updated On :23 மார்ச் 2024, 6:31 pm

திருநெல்வேலி அருகே தாழையூத்தில் சனிக்கிழமை ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டாா். திருநெல்வேலி தச்சநல்லூா் மேலக்கரையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (37). இவரை, அடிதடி, கொலை மற்றும் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த வழக்கில் போலீஸாா் கைது செய்தனா். இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) கீதா பரிந்துரைத்தாா். இதையடுத்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் பா.மூா்த்தி உத்தரவின்பேரில் மணிகண்டன், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.