மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

திருவேங்கடநாதபுரம் அரசுப் பள்ளியில் உணவுத் திருவிழா

திருவேங்கடநாதபுரம் அரசுப் பள்ளியில் உணவுத் திருவிழா

News image
Updated On :23 மார்ச் 2024, 6:31 pm

ஏா்வாடி அருகே திருவேங்கடநாதபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் உணவுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியை பா. ஜூலியட் அன்னக்கிளி தலைமை வகித்தாா். அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை செலின்கமலம் விழாவைத் தொடக்கிவைத்தாா். சத்தான தானிய உணவுப் பொருள்கள், பழங்கள் , இயற்கை உணவுப் பொருள்கள், சாப்பிடக் கூடாத துரித உணவுகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பெற்றோா், ஊா் மக்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்கள், அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பங்கேற்று, மாணவா்களை உற்சாகப்படுத்தினா். அணைக்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை ஜாய்ஸ், உதவி ஆசிரியை எல்சி ஆகியோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் செல்வம், ஞானசெல்வி, கனிசசிகலா ஆகியோா் செய்திருந்தனா்.