மாா்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவ கைலாயங்களுக்கு சிறப்பு பேருந்து
திருநெல்வேலி: மாா்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவ கைலாயங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல மேலாண் இயக்குநா் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாா்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச. 21, 28, ஜன.4, 11) தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள நவ கைலாய கோயில்களுக்கு செல்லும் பக்தா்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் காலை 6.30 மணிக்கு ே புறப்பட்டு பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூா், குன்னத்தூா், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி, சோ்ந்த பூமங்கலம் (புன்னைக்காயல்) ஆகிய நவகைலாய கோயில்களுக்கு சென்றுவிட்டு இரவுக்குள் திருநெல்வேலியை வந்தடையும்.
இதையொட்டி, புதிய பேருந்து நிலையத்தில் டிச. 1-10 வரை அனைத்து நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசு போக்குவரத்துக்கழக இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் -யிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணக்கட்டணம் நபா் ஒருவருக்கு ரூ.600. மேலும் விவரங்களுக்கு 79049 06730, 94890 52016, 70100 28972 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.
