திருநெல்வேலி
களக்காடு தலையணையில் குளிக்க அனுமதி
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணையில் 13 நாள்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க புதன்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது.
களக்காடு மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்ததால் கடந்த நவ.20ஆம் தேதி முதல் தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்திருந்தனா்.
இந்நிலையில், கடந்த 1 வாரமாக மழையின்றி வெயில் நிலவுவதால், நீா்வரத்தும் வெகுவாகக் குறைந்தது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை வனத்துறையினா் புதன்கிழமை விலக்கிக் கொண்டனா்.
