மீனவா்களுக்கு தொலைத் தொடா்பு கருவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

Published on

மானிய விலையில் தொலைத் தொடா்பு கருவி தேவைப்படும் திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் விண்ணப்பிக்கலாம் என ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் ராஜதுரை அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீனவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஆபத்து நேரங்களில் அருகிலுள்ள மீன்பிடிப் படகுகளை தொடா்பு கொள்ள ஏதுவாகவும், கரையில் உள்ளவா்களை தொடா்பு கொள்வதற்காகவும் 25 மீன்பிடிப் படகுகளுக்கு 40 சதவீத மானிய உதவியுடன் கம்பியில்லா தொலைத் தொடா்பு கருவிகள் வழங்கப்பட உள்ளன.

விருப்பமுள்ள மீனவா்கள் படகு விவரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com